செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

சுகமான வலிகள்






நீ 
செல்லும் போது 
உனக்கே
தெரியாமல் 
உன்னை 
ஒளிந்துகொண்டு 
பார்த்த
நினைவுகள்...!

உன்னை
கண்டவுடன் 
உன்
முகத்தை 
பார்க்க
முடியாமல் 
தலைகுனிந்த 
நிமிடங்கள் ....!

நீ  
என்னை 
ஒரு முறை 
பார்த்துவிட்டாலே
ஒரு 
நொடியில் 
இந்த 
உலகமே 
இருண்டுபோய் 
வானத்தில்
பறந்த
நிமிடங்கள்.....!

கண்ணாடியில் 
என் 
முகம் 
பார்த்தாலும்
உன்
முகம் மட்டுமே 
தெரிந்த 
நிமிடங்கள்....!

உன்னிடம் 
பேசும் போது 
என்
இதய  துடிப்பின் 
ஓசை
என் 
காதுகளுக்கே 
கேட்ட 
நிமிடங்கள்....!

கூட்டமாய்
உன் 
நண்பர்களோடு 
நீ
வந்தாலும் 
உன்னை
மட்டும் 
அடையாளம் கண்ட
நேரங்கள்.....!

ஏதேனும் 
ஒரு நாள் 
நீ 
அணிந்த 
கலர் உடை 
நான்
அணிந்திருந்தால்
ஐயோ ..
நான் பட்ட 
மகிழ்ச்சி தருணங்கள்....!

எப்ப தான் 
காலேஜ் போவோமோ 
என்று ஏங்கி
தவித்த நாட்கள் ...!

உலகில்
நடப்பது
என்னவென்று  தெரியாத
நேரத்திலும் 
நீ 
உன்னை பற்றி 
இன்னும் 
அதிகமாக 
அறிய துடித்த 
நாட்கள் .....!

நீ  
எடுத்த 
மதிப்பெண்களை 
உனக்குமுன் 
நான்
பார்க்க 
துடித்த  நாட்கள்.....!

முதல் முதல் 
உன்னை 
கண்ட போது 
என் 
முகம்
வியர்த்த 
நேரம்....!

பாடத்தை கூட 
கவனிக்காமல் 
உன்னை மட்டுமே 
கவனித்து 
கொண்டிருந்த
நேரங்கள்....!

கல்லூரி தேர்வில் 
எதையுமே 
எழுதாமல் 
உன்னை
நினைத்து 
கவிதைகளாய்
எழுதிய
நாட்கள் ....!

ஒரு நாள்
நீ
கல்லூரிக்கு 
வராவிட்டாலும்
என்
முகமே
சோக மயமாகிய
நாட்கள்...!
 
உனக்கு
பின்னாலே 
நடந்த
அந்த
இன்ப தருணங்கள்.....!

யாருடைய
வகுப்பையும்
கவனிக்காத
நான்
நீ
செமினார்
எடுக்கும் போது
மட்டும்
கண்
சிமிட்டாமல்
ரசித்த
நாட்கள்....!

உன் 
முகத்தில்
பூத்திருக்கும்
சிரிப்பு 
வாடும் போதெல்லாம் 
என்
இதயமெல்லாம் 
வாடிய  நிமிடங்கள்....!

நீ 
நடந்த 
கால் தடங்களில் 
நான்
நடந்த  
வெற்றி  பயணங்கள்....!

வகுப்பில் 
நீ 
அமரும் இடத்தில் 
காலையிலேயே
நான் 
வந்து
அமர்ந்து கொண்ட 
நாட்கள்...!

நீ
உண்ணும்
அழகை 
கண்டு 
ரசித்த
நாட்கள்....!

கேண்டீனில் 
நீ 
என்ன வாங்குகிறாயோ
அதையே 
நானும் வாங்கி..
நீ 
பார்க்க
நான் 
உண்ட 
நாட்கள்.....!

யாராவது
என்
பேரை சொல்லி
உன்னை
கூப்பிடமாடார்களா
என ஏங்கி
தவித்த நாட்கள்...!

நீ
என்னை
தவிர்த்த
நாட்களில்
நான்
தவித்த
நாட்கள்....!

என்றாவது
ஒருநாள்
நீ
என்னுடன்
பேசமாட்டாயா
என்று
ஏக்கம்
கொண்ட
நாட்கள் ....!

இவை
எல்லாமே 
இன்னும்
சுகமான
வலிகள் தான்.....!


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக