வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

ஏன் மௌனத்தை மட்டுமே பதிலாய் தந்தாய்....?




அன்று...!
எனக்கு 
வந்த தைரியம் 
மாவீரன் 
அலெக்சாண்டர்க்கும் 
வந்திருக்காது....!
என்ன தான் 
வீரம் வந்தாலும் 
உன் 
கண்கள் முன்னே 
நான்
ஒரு
கோழை தானே ......!

ஒரு பக்கம் 
என் 
இதயம் 
துடிதுடித்து 
கொண்டிருக்க ...
ஒரு வழியாய் 
உன்னிடம்
பேச வேண்டும் என்றேன்...!
அப்போது  
உன்
மௌனத்தை
மட்டுமே
பதிலாய்
தந்தாய்....!

வகுப்பை
விட்டு 
வெளியில் 
செல்லும் போது..
உன்னை 
வழி மறித்தேன்...
என் 
வாழ்வையே
வழி மறித்த 
உன்னை....!

நீ 
தலை குனிந்தாய்...!

என்
பெயர் 
உனக்கு 
தெரியுமா என்றேன் ?
தெரியும் என்றாய்...
பின் ஏனடி
என் 
இதயம்  மட்டும்
உனக்கு 
தெரியாமல் போனது 
என்றேன் எனக்குள்  ....?

உன்னை
நேசிக்கிறேன் என்றேன்...!
உன் 
மௌனத்தை
மட்டுமே
பதிலாய்
தந்தாய்....!

உனக்கு 
என்னை 
பிடித்திருக்கிறதா என்றேன் ...!
தலை கவிழ்ந்து 
உன் 
மௌனத்தை
மட்டுமே
பதிலாய்
தந்தாய்....! 

அப்படி என்றால் 
என்னை 
உனக்கு 
பிடிக்கவில்லை 
அப்படித்தானே என்றேன்...?
ஆம்  
என்றும் சொல்லாமல் 
இல்லை
என்றும் சொல்லாமல்
உன் 
மௌனத்தை
மட்டுமே
பதிலாய்
தந்தாய்....!

நான்
உன்னைப்போல்
அழகாக இல்லை
அதனால் தானே 
உனக்கு
என்னை 
பிடிக்கவில்லை என்றேன்...!
அப்படி இல்லை என்றாய்...
பிறகு 
எப்படி என்றேன்...?
உன் 
மௌனத்தை
மட்டுமே
பதிலாய்
தந்தாய்....!

நான் கருப்பு....
அதனால் தானே
உனக்கு 
என்னை
பிடிக்கவில்லை என்றேன்...!
அப்படி இல்லை என்றாய்...
பிறகு
எப்படி என்றேன்...?
உன் 
மௌனத்தை
மட்டுமே
பதிலாய்
தந்தாய்....!

நான் 
படிப்பில் கொஞ்சம் சுமார் தான்....
அதனால் தானே
உனக்கு 
என்னை 
பிடிக்கவில்லை என்றேன்...!
அப்படி இல்லை என்றாய்...
பிறகு 
எப்படி என்றேன்...?
உன்
மௌனத்தை
மட்டுமே
பதிலாய்
தந்தாய்....!

இரண்டில் 
ஒன்றை சொல் என்றேன்....!
நீ 
அப்படியெல்லாம் 
எனக்கு
சொல்ல தெரியாது என்றாய்...!
அப்போது 
என்னதான்  
எனக்கு பதில் என்றேன்....?
நீ 
மட்டுமே பதில் என்று 
நான் 
அறிந்த பின்னும்....! 

இரு 
மனங்கள் 
இணைந்துவிட்டால்
போதுமே...!
வாழ்க்கை பாலத்தை
இணைக்கும் 
இரு 
முனைகளை போல....!
வேறு 
எதுவுமே வேண்டாமே....!
இது 
தெரியாதா 
உனக்கு...? 

என் 
குடும்பத்திற்கு 
பிடிக்காது என்றாய்....!
அப்போ 
என்னை 
உனக்கு 
பிடிக்குமா என்றேன்...?
கண்களால் மட்டும் 
பேசினாய்....!
வார்த்தைகள் 
வரவில்லை....!
உன் 
மௌனத்தை
மட்டுமே
பதிலாய்
தந்தாய்....!

என் 
பெற்றோர் 
ஒத்துகொள்ள மாட்டார்கள் என்றாய்....!
அவர்கள் 
ஒத்து கொண்டால் என்ன..? 
இல்லையென்றால் என்ன..?
என்னை 
உனக்கு 
பிடித்திருக்கிறதா என்றேன்?
மீண்டும் 
உன் 
மௌனத்தை
மட்டுமே
பதிலாய்
தந்தாய்....! 

ஒரே
ஒரு வார்த்தை
சொல் என்றேன்....!
மறந்திடு என்றாய் ...!
சரி 
மறந்துவிடுகிறேன் 
நீ
சொன்ன 
இந்த 
வார்த்தையை 
என்றேன் ....!
மீண்டும் 
உன் 
மௌனத்தை
மட்டுமே
பதிலாய்
தந்தாய்....! 

இப்போது
என் 
கண்களின்
ஓரத்தில்
கண்ணீர்
கசிகிறது....!

கடைசியாக
அவளிடம்
கேட்டேன்....!

நான் 
உன்னிடம்
கேட்டது
உன் 
இதயத்தை தானே ?
நான்
கேட்காத 
இந்த
மௌனத்தை மட்டும் 
ஏன் 
கேட்காமலேயே
பதிலாய் 
தந்தாய்..............?






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக