புதன், 9 பிப்ரவரி, 2011

நான் சாகாமல் சாகிறேன்...!


நீ 
சிரிக்காமல் 
சிரிக்கிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ
என்னை
பார்க்காமல்
பார்க்கிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ
என்னுடன்
பேசாமல் 
பேசுகிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ
என்னை 
சுடாமல் 
சுடுகிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ
என்னை 
தொடாமல் 
தொடுகிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ 
என்னை 
அணைக்காமல் 
அணைக்கிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...!

 நீ
என் 
இதயத்தில் 
வலிக்காமல் 
வலிக்கிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ 
என்னை 
பற்றாமல் 
பற்றுகிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ 
என்னை 
சுமக்காமல் 
சுமக்கிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ
என்னை 
வருடாமல் 
வருடுகிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ
என்னை 
தேற்றாமல் 
தேற்றுகிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ 
என்னுடன் 
பழகாமல் 
பழகுகிறாய்...!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ 
என்னில் 
வாழாமல் 
வாழ்கிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ 
போகாமல் 
போகிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ 
வராமல் 
வருகிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ
என்னை 
தீண்டாமல் 
தீண்டுகிறாய்...!
நான் 
சாகாமல்
சாகிறேன்...! 

நீ
என்னுடன்
நிற்காமல் 
நிற்கிறாய்....!
நான் 
சாகாமல்
சாகிறேன்...!






































தலைப்பில்லாத கவிதை


இப்போது 
தலைப்பில்லாத 
கவிதையாக 
நான்....!
நீ
தலைப்பாகி 
எனக்கு 
ஒரு 
அர்த்தம்
கொடுப்பாயா...?





உயிரே...!

என்னில் 
இன்னும் 
சாகவில்லை 
உன் 
நினைவுகள்....!
அதனாலே
சாகிறது 
என் 
நினைவுகள் ....!

என் 
கனவுகளிலும் 
உன் 
நினைவுகளே....!
உன் 
நினைவுகளில்
என் 
நிழலாவது 
உண்டா?
 

உயிரில்லாத 
நிழல் !
இன்று 
நீயில்லாத
நானும்
அதுபோல்....!
 
நீ 
வாழும் 
என் 
உள்ளம் கூட
ஒரு 
தாஜ்மஹால் 
தான்....!



நீ 
பவுர்ணமி 
நிலவாக
தெருவில் 
வந்ததால் 
நிலவு 
ஓடிபோய்
மறைந்து
அமாவாசை ஆனது....!

  




உன் 
முகதுடிப்பு 
என் 
நாடித்துடிப்பை 
நிறுத்திவிடும் 
போலிருக்கிறது...!

என் 
கவிதைகளின்
வரிகளையே
வாரிவிட்டவள் 
நீ...!

 
என் 
பேனாவின் 
கூர்முனையை 
தேயவைத்தவள் 
நீ....!

தடம் மாறாமல் 
சென்ற 
என்னை 
தடுமாற
வைத்தவள்
நீ...!

உன்னிடம் 
பேசும்போது
மட்டும்
ஊமையாகிறேன் ...!
ஊமையாய்
இருப்பதிலும் 
ஒரு 
சுகம் 
உள்ளதடி...!




தலைவிரித்து 
கொண்டிருந்த 
என்
இதயம் 
தலைதெரித்து
ஓடியது...
உன்னை
கண்டபோது...!



தடைசெய்ய பட்ட பகுதி...!
அவள் 
இதயம்...!
அத்துமீறி 
நான் 
நுழைந்ததால்
இதய
துறையால்
கொடுக்கப்பட்டது 
ஆயுள் சிறை....!


நீ 
என் 
நித்திரையை மட்டுமா 
கலைத்தாய்..?
என்
கனவை
கூடத்தான்.....!

என் 
தூக்கத்தை 
கலைத்த
நீ
உன்னால்
ஏற்பட்ட
துக்கத்தை 
கலைக்க 
ஏன்
மறந்தாய்....?

லேசான 
என் 
இதயம் 
கனமானது
உன் 
நினைவை
கொண்டதால்...!



காலங்கள் 
மறைந்துவிட்டன....!
ஆனால்
இன்னும் 
மறையவில்லை 
உன்னால்
ஏற்பட்ட 
கோலங்கள் 
மட்டும்....!

சொல்வதற்கு 
ஒன்றுமில்லை...!
மறக்கவில்லை 
உன்னை..
மறுக்கிறேன்....!





















நீ இல்லாவிட்டால் !




நான் 
மலர் என்றால் 
அதன் 
இதழ்கள்
நீ....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான் 
வானவில்  என்றால் 
அதன் 
நிறங்கள்
நீ....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
மின்னல் என்றால் 
அதன் 
ஒளி
நீ....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
உள்ளங்கை என்றால் 
அதன் 
ரேகைகள் 
நீ....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
நூலகம் என்றால்
அதன் 
நூல்கள் 
நீ....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
கண்கள் என்றால்
அதன் 
கண்மணிகள் 
நீ....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
புத்தகம் என்றால்
அதன்
பக்கங்கள்
நீ....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
கைகள் என்றால்
அதன்
விரல்கள்
நீ.....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
உடல் என்றால்
அதன்
உயிர்
நீ....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
சிற்பம் என்றால்
அதன்
சிற்பி
நீ.....! 

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
ஓவியம் என்றால்
அதன்
ஓவியன்
நீ....! 

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
பறவை என்றால்
அதன்
சிறகுகள் 
நீ.....!

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான்
சேலை என்றால்
அதன்
நூல்கள்
நீ....! 

நீ
இல்லாவிட்டால்
நான்
இல்லை....!

நான் 
என்றால் 
நீ.....!


நீ
இல்லாவிட்டால்
நானே
இல்லை....!
















ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

கொலைகாரி






ஒரு
நொடியில் 
என் 
ஒவ்வொரு 
நாடியும் 
ஆடி போனது..
உன்னை 
கண்டபோது.....!

உன்னை 
முதலில்
கண்டபோது
வியர்த்தது 
என் முகம் 
மட்டுமல்ல
என் 
இதயமும்
கூடத்தான்......!

நான்
நானாக 
இல்லை...!
காரணம் 
உன் 
மீன் 
கண்களின் 
தொல்லை...!

அன்று 
நான் 
கொலை செய்யப்பட்டேன் !
உன் 
கண்கள்
கொலைக்கருவி..!
நீ தான்
கொலைகாரி....!















முகவரி






அவளின் 
முக 
விலாசத்தை 
காட்டினாள்....!
இந்த
முள்ளின் 
முகவரி
தொலைந்து 
போனது.....!








எனக்குள்ளே நான் சிரிக்கிறேன்....





உன்னையே 
சுற்றி சுற்றி
நிழலிட்ட 
தருணங்களின்
நகல்கள்.............! 

எனக்குள்ளே
நான்
சிரிக்கிறேன்.... 

வகுப்பரையில்
நான்
உன்னை 
மட்டுமே
பார்க்க...
வெகு நேரம்
அழுது கொண்டிருக்கும்
குழந்தைக்கு
பாலூட்டும்
தாயை போல..
நீ
பார்த்த  
அந்த
பார்வையில்.....
பிரபஞ்சத்தின்
எல்லைக்கே 
சென்று
வந்த
தருணங்களை.....
நினைத்து...

எனக்குள்ளே
நான்
சிரிக்கிறேன்..... 

சில  
சந்தர்பங்களில்
நீயும்
நானும்
ஒரே நிற 
ஆடைகளை
அணிந்து 
வந்த போது....
ஆயிரம்  
இறக்கைகள்
கொண்ட
அதிசய  
பறவையாகி
சிலாகித்த
அந்த  
உணர்வை
நினைத்து... 

எனக்குள்ளே
நான்
சிரிக்கிறேன்.....

நீ
என்னருகே
கடந்து சென்ற
தருணங்களில்.....
இருவேறு
காந்தபுலங்களுக்கு
இடையில்
சிக்கிய 
இரும்பு 
துகள்களாய்
நான் 
பட்ட 
அவஸ்தையை
நினைத்து....... 

எனக்குள்ளே
நான்
சிரிக்கிறேன்.....

ஒவ்வொரு
மனிதனுக்கும்
ஒருமுறைதான்
மரணம்..
நீ  
என்னை
ஒரக்கண்ணால்
பார்த்த
ஒவ்வொரு
கனமும்
எனக்கு 
மரணந்தான்....!
ஆனால்
அடுத்த
நொடியே
பிழைத்த
விந்தையை
நினைத்து.......!

எனக்குள்ளே
நான்
சிரிக்கிறேன்.....

நீ 
என்னுடன்
எப்போதாவது தான்
பேசுவாய்...
ஆண்களுக்கு
வெட்கம் வருவது....
அதுவரை
தெரியாது....
அதை 
நினைத்து....

எனக்குள்ளே
நான்
சிரிக்கிறேன்.....












தேடல்





எங்கே
போனாய்..?
என்னைவிட்டு....!
தன் மீது
விழுந்த
மழைத்துளியை
தேடுகிறது...பூமி !
என்னிலே
கலந்து போன
உன்னை
வெளியில் தேடுகிறேன்
நாளும்.......!











சலவை






சலவை செய்ய 
செலவு செய்யாமல்...
அழுக்கு 
துணியை
போட்டிருப்பேன்
நான்.....!

ஆனால்
உன்னை 
கண்ட பிறகு...
என்னை 
அழகாய் 
ஆக்கவே...
என்
துணியை
சலவை செய்யவே 
செலவு 
செய்கிறேன்......!












சனி, 5 பிப்ரவரி, 2011

என் கனவுகளின் கதாநாயகியே !


 




என் 
கனவுகளின் 
கதாநாயகியே .....!
உன் 
அழகிற்கு 
வானமே
எல்லை ....!

தங்க
இழைகள்
உன்
தலைமுடிகள் ...!

வெள்ளை
பூக்கள் 
உன்
பற்கள்...!

கூவும் 
குயிலுக்கே
சவால் விடுகிறது 
உன் 
குரல்....!

நீ 
துப்பும்
எச்சில் 
மலரில் இருந்து
வழியும்
தேன்...!


என்னை விட 
உன் 
நிழல் 
அழகானது....!


உன்னுடன் 
பேசும்போது மட்டும்
வார்த்தை
பஞ்சம்
ஏற்படுகிறதே...!


குழந்தைத்தனம் 
செய்வதில் 
குழந்தை
நீ....!

நிலா 
தெருவில்
நடப்பதை 
பார்த்திருக்கிறேன் ...
நீ 
நடக்கும் போது ...!

நீ 
இருக்கும்
வீடு
சொர்க்கம் தான் ....!
தேவதை
இருக்கும்
இடத்தை 
வேறு
எப்படி
அழைப்பது....?

நீ 
வெட்கப்பட்டு 
முகத்தை 
மறைத்து
கொள்ளும் போது
மலையின்
பின்னால் 
நிலவு
ஓடி 
ஒளிந்து கொள்வது
போலிருக்கிறது .....!

என் 
உயிரின் 
அத்தனை
அணுக்களிலும் 
ஆணி
அடித்தது போல 
ஆழமாய்
பதிந்திருக்கிறது 
உன்
முகம்....!

எனக்கு
கனவு என்று
ஒன்று
இருந்தால்
அதிலும்
நீ
தான்
கதாநாயகி......!















சோகம்






பூக்களே 
இல்லாத போது 
செடிக்கு 
என்ன 
மகிழ்ச்சி...?
நீயே 
இல்லாத போது
எனக்கென்ன 
மகிழ்ச்சி....?

உன்னை 
நினைக்கும் போதே 
உன் 
நினைவெல்லாம்
என் 
கண்ணீராய் 
மாறுகிறது ....!

கண்ணீரை 
மட்டும் 
தந்த
நீ
அதை
துடைக்க 
மறந்தது
ஏன் ?

உன் 
நினைவால்
வரும்போது ....
என்
கண்ணீரும் 
புனிதமாகிறது....!

உன் 
நினைவு
வரும்போது 
உப்பு
கண்ணீரும் 
இனிக்கிறது...!

இனியவளான
உன்னை 
இனி 
ஒரு போதும்
நினைக்கமாட்டேன் 
என
நான்
நினைக்கும் போதே
உன்னை
நினைத்துவிடுகின்றேன்  ....!

கனியாகிய
உன்மேல் 
பனியாகி
விழவேண்டும்
என 
தோன்றுகிறது...
ஆனால்
பகலவன்
வரும் போது
பனி
மறைந்து தானே
ஆக வேண்டும்....!
நானும்
உன்னை
மறந்து தானே
போக வேண்டும்...!

என்
கண்ணின்
கருவிழிகள் 
விழித்துகொண்டே தான்
இருக்கிறது....!
என்றாவது 
நீ 
வந்துவிடமாட்டாயா என்று...!
நான் 
உன்னை 
நேசித்தது 
உனக்கு 
தெரியும் ...!
நீ 
பிரிந்ததால் 
நான்
பட்ட கஷ்டம்
யாருக்கு 
தெரியும்...?

உன் 
உடலை
நான்
விரும்பவில்லை ...
உன் 
உள்ளத்தையே 
விரும்புகிறேன்...
என் 
அன்பு 
புனிதமடி....!

அடிக்கடி 
உன்
நினைவு 
வரும் போது
அடிக்கு அடி
என்
நெஞ்சு 
வலிக்கிறது...! 

வலியிலும் 
ஒரு 
சுகம் 
உள்ளதடி....!
































கண்கள்

 தமிழே  ....!
ஆயுத  எழுத்து 
உன் கண்கள்....!

இதயத்தை 
கொல்லும் 
அரிவாள்கள் 
உன் 
புருவங்கள்....!

என்னை
தாலாட்டும் 
மயில் தோகைகள்
உன்
கண் 
இமைகள்...!

உன் 
கண்கள் என்ன
பழம் 
பிழியும் இயந்திரமா ..?
என்
இதயத்தை 
இப்படி 
பிழிந்து விட்டதே.....! 

உன்
பார்வையில் 
ஆயிரம் 
அர்த்தங்கள் உள்ளதடி ....!

உன் 
கண்களில் 
வெளிப்படும் வெப்பம் 
என் 
இதயத்தை 
உருக்கி விடுகிறது
உரு தெரியாமல்....!

துப்பாக்கி தோட்டாக்கள் 
உன் கண்கள்...!
ஊடுருவி சென்றது 
என் இதயத்தை  
அவை....!

உன் 
புருவத்தின் 
உருவத்தால் 
சாகிறேன் .....!





சேமிப்பு


 
 
என் 
விழி 
வாய்காலில்
ஓடும் 
கண்ணீர்துளிகள் 
உன் 
நினைவின்
சேமிப்புகள் .....! 
 
 
 
 
 
 
 
 

மலரே



மலரே...!

நீ 
வழியோரம் 
நடக்கையில் 
வழி 
பூக்களெல்லாம் 
பூக்கிறது....!

செடியில் 
இருப்பதை விட
பூக்கள் 
உன்
தலையில் 
இருப்பதையே 
விரும்புகின்றன....!

மலரே 
மலரை 
சூடிக்கொள்ள முடியுமா?
நீ
மட்டும் எப்படி ....?

பூக்கள் பேசுமா....?
பேசும்....!
நீ 
பேசுகிறாயே .....!

உன் 
பெயரை 
பூக்களின்
பெயர் 
பட்டியலில் 
சேர்த்துவிடலாம் ....!

உன் 
தலைமுடி 
வாசனையில் 
மயங்கி 
மாலைக்குள்ளாக 
வாடிவிடுகிறது
பூக்கள் ....!
செடியில்
இருக்கும் போது
மல்லிகை பூவுக்கு 
அழகு
இல்லை ...!

அது
உன் 
தலைக்கு வந்த
பின்பு  தான் 
அழகே
பெறுகிறது....!

யார் சொன்னது ?
நிலவு
அழகு என்று....!
அவர்கள்
இன்னும் 
உன்னை 
பார்க்கவில்லை போலும் ....!

பூக்களுக்குள்
நீ
நடந்து
செல்லாதே ...!
பூக்களுக்குள் 
நீ
நடந்து
செல்லும் போது
யார் பூ..?
யார் நீ...?
என்றே
அடையாளம்
கண்டுபிடிக்க முடிவதில்லை.....!

பூக்களெல்லாம்
உன்னிடம்
பேசவே
ஆசைபடுகின்றன....!
அதனால் தான்
நீ
வரும் போது
தென்றலில்
அசைந்தாடி
உனக்கு
சைகை
காட்டுகின்றன....!

உன்
சிரிப்பை
பார்த்து தான்
பூக்ளெல்லாம்
பூக்கவே
கற்று
கொண்டிருக்கின்றன.....!

பூக்களால்
உனக்கு
அழகு இல்லை....
உன்னால் தான்
பூக்களுக்கே
அழகு....!

நீ 
பூப்பறிக்க
வரும்போதெல்லாம் 
பூக்களெல்லாம் 
ஆர்பரிக்கின்றன....!








வெட்கம்









நான்
உன்னிடம் 
கொடுக்க நினைத்த
வெள்ளை 
ரோஜா  
உன்னை  
பார்த்ததும்  
வெட்கத்தால்  
சிவந்து விட்டது .....!








உன் பெயர்


கவிதை 
எழுத அமர்ந்தேன் ...!
ஒன்றுமே
வரவில்லை....
உன்
பெயரைத் தவிர....!

என் 
பேனா
திரும்ப திரும்ப 
உன் 
பெயரை மட்டுமே 
கிறுக்கி
கொண்டிருந்தது .....!

அன்பையே 
பெயராக
கொண்டவளே ...!
என்
பேனாவின் 
கூர்முனை
உன் 
பேரை குத்தும்
என்பதாலேயே 
நான் 
உன்
பெயரையே 
எழுதுவதில்லை....!










நினைவு சின்னம்






கல்லூரியில் 
நான் 
உன்னிடம்
வாங்கிய
பென்சில், ரப்பர் எல்லாம் 
நினைவு சின்னம் 
ஆகிவிட்டது ...
உனக்கு
தெரியுமா ?







அவளின் நினைவு....!



 மலை அடிவாரத்தில்
தொட்டு செல்லும்
சாரலாய்..
தெவிட்டாத
அவளின் நினைவு....!
இன்றும்
சில்லிட்டு கொண்டுதான்
இருக்கிறது......!
வானத்தை
மூடியிருக்கும் மேகங்களை
பார்த்தால்....
மனம் முழுக்க
பதிவாகியிருக்கும்..
அவளின் 
சிரிப்போசைதான்..
நியாபகத்திற்கு வருகிறது......!








அவளின் புகைப்படம்




அவளின் 
புகைப்படம் 
பார்க்கும்போதெல்லாம் 
என் 
மனசு 
ஒரு முறை 
சிரிக்கிறது....!
என் 
காதுக்குள்ளே எதோ 
புல்லாங்குழல் சத்தம் 
கேட்கிறது....!