சனி, 5 பிப்ரவரி, 2011

கண்ணாமூச்சி



தேர்வுக்கு
செல்லும் மாணவியின்
கையில் புத்தகம்
''காதலெனும் கண்ணாமூச்சி''...!

இவளின் தேர்வு...
தாளிலா?
தேகத்திலா?

பதிந்தது....
புத்தகமா?
முத்தமா?

சிந்திப்பது...
பாடங்களையா?
வயதின் நியாயத்தையா?

பயம்......
வினாக்களா?
முதல் தொடலா?

அடுத்தது......
உயர் கல்வியா?
இன்னொரு
உயிரின் வருகையா?

முடிவு........
செய்திதாளிலா?
காவல் நிலையத்திலா?







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக