சனி, 5 பிப்ரவரி, 2011

மலரே



மலரே...!

நீ 
வழியோரம் 
நடக்கையில் 
வழி 
பூக்களெல்லாம் 
பூக்கிறது....!

செடியில் 
இருப்பதை விட
பூக்கள் 
உன்
தலையில் 
இருப்பதையே 
விரும்புகின்றன....!

மலரே 
மலரை 
சூடிக்கொள்ள முடியுமா?
நீ
மட்டும் எப்படி ....?

பூக்கள் பேசுமா....?
பேசும்....!
நீ 
பேசுகிறாயே .....!

உன் 
பெயரை 
பூக்களின்
பெயர் 
பட்டியலில் 
சேர்த்துவிடலாம் ....!

உன் 
தலைமுடி 
வாசனையில் 
மயங்கி 
மாலைக்குள்ளாக 
வாடிவிடுகிறது
பூக்கள் ....!
செடியில்
இருக்கும் போது
மல்லிகை பூவுக்கு 
அழகு
இல்லை ...!

அது
உன் 
தலைக்கு வந்த
பின்பு  தான் 
அழகே
பெறுகிறது....!

யார் சொன்னது ?
நிலவு
அழகு என்று....!
அவர்கள்
இன்னும் 
உன்னை 
பார்க்கவில்லை போலும் ....!

பூக்களுக்குள்
நீ
நடந்து
செல்லாதே ...!
பூக்களுக்குள் 
நீ
நடந்து
செல்லும் போது
யார் பூ..?
யார் நீ...?
என்றே
அடையாளம்
கண்டுபிடிக்க முடிவதில்லை.....!

பூக்களெல்லாம்
உன்னிடம்
பேசவே
ஆசைபடுகின்றன....!
அதனால் தான்
நீ
வரும் போது
தென்றலில்
அசைந்தாடி
உனக்கு
சைகை
காட்டுகின்றன....!

உன்
சிரிப்பை
பார்த்து தான்
பூக்ளெல்லாம்
பூக்கவே
கற்று
கொண்டிருக்கின்றன.....!

பூக்களால்
உனக்கு
அழகு இல்லை....
உன்னால் தான்
பூக்களுக்கே
அழகு....!

நீ 
பூப்பறிக்க
வரும்போதெல்லாம் 
பூக்களெல்லாம் 
ஆர்பரிக்கின்றன....!








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக