வியாழன், 3 பிப்ரவரி, 2011

ஈழத்து கதறல்



சிரிக்க  
வேண்டிய வயதில் 
கதறும்  
சிறுவன்....! 

படிக்க வேண்டிய வயதில் 
பயத்தால்  
நடுங்கும் 
கொடூரம் ....!

வெளியில் வருவதற்கு 
இவன்
கண்களில் 
கண்ணீர்  கூட இல்லை...!
அழுது அழுதே 
அதுவும் 
வற்றிவிட்டது போலும் ....!

வெற்றுடம்பாய் இருக்கும் 
இவனை 
சுற்றிலும் 
வெற்றிடம் தான் 
காணப்படுகிறது.....!

கலர்
படமாய் 
இருக்க வேண்டியவன் 
இங்கு 
கருப்பு வெள்ளை 
படமாகி 
போனதேன்...?

இவனின்
எண்ணங்களின்  
குமுறலை
எந்த
குமுதத்தாலும் 
விவரிக்க
முடியாது......!

இறுக்கி 
பிடித்தான் இவளை - 
பயத்தால் 
கிறுக்கு
பிடித்தவன் போல் ...!

கை கால்கள் 
சிதறி போன 
உறவினர்களை  பார்த்து..
கை கால்கள் 
உதறி  போய்
கதறி அழும்
இவனை 
பார்த்தால்...
உள்ளம் 
படபடக்கிறது......! 
நெஞ்சம்
தடதடக்கிறது.... ! 

சிறுவா...!
நீ 
அழுவது கூட 
யாருக்கும் கேட்காது.... !
குண்டு சத்தத்தில் 
பல காதுகள்
செவிடாகி விட்டன ....!
பின்னே
ஏன் 
அழுகிறாய்....?

பள்ளிக்கு
போகமுடியாது என்றா?
உனக்கு  
தெரியாதா ..?
தங்குவதற்கு 
ஒரு கட்டிடமும் 
இல்லாதபோது
பள்ளிக்கூடம் மட்டும்  
எப்படி
இருக்க முடியும் என்று ....?

இவன் 
அலறலை 
காதிருப்போர்  கேட்கட்டும்....!
நீதிக்கு 
காத்திருப்போர்
கேட்கட்டும்.....!

நீதியின் 
காதுகளும் 
செவிடாகிவிட்டிருக்க  கூடும்....!
குண்டு 
சத்தங்களில்....!

இன்னும்
சரியாக 
பல் கூட 
வளரவில்லை அவனுக்கு ...!
இன்னும் 
பால் குடிக்கும்
வயதுதான் தான்......!
ஆனால் 
பெண்களுக்கு 
பால் கூட
சுரக்காத நிலை....!
குடிக்க 
தண்ணீர் கூட 
கிடைக்காவிட்டால்
பால் கூட எப்படி சுரக்கும் ....?

அப்பெண் 
அவனை 
அணைக்க
ஆர்வம் காட்டவில்லை....!
அப்படி செய்து 
அவனை 
கோழையாக்க 
விரும்பவில்லை  
இந்த ஏழை....!

தோல் சுருங்காத
இப்பெண்ணுக்கு
அதிகம் 
வயதிருக்காது....! 
அவளை 
இச்சிறுவன்  
அணைக்கும் விதத்தை
பார்த்தால் 
இப்பெண் 
அவனின் 
தாயாகத்தான் 
இருக்க முடியும் ....!

அவன் 
அணைத்தாலும் 
இவள் 
அணைக்க மறுக்கிறாள்......!
தன்
 இடக்கையால் 
அவனை 
எடுத்து விட பார்க்கிறாள்....!
போராட்டத்துக்கு
இவனை 
இப்போதே 
தயார்படுத்த பார்க்கிறாள்....!

இச்சிறுவன் 
அவள் 
கால்களை 
பிடிப்பதாலோ என்னவோ
அவனை 
இடக்கையால் 
எடுத்துவிடுகிறாள் ....!
உயிரே போனாலும் 
காலை பிடிக்க கூடாது 
என்பதை  
சொல்லி கொடுக்கிறாளோ .....?

பயத்தால்
அழும்
சிறுவனை 
வலக்கையால் கூட
தூக்க மாட்டேன் 
என
சொல்லும் 
இவள் 
ஒரு 
வீர தாய் தான்......!

நீதியின் 
கதவை தட்டினால் 
திறப்பது 
அநீதியின் கரங்கள்... !
என்ன செய்வது....?
அநீதியின் 
கரங்களை
முறிப்பதை தவிர....
இதை தான் 
நம்
அண்ணன் பிரபாகரன் 
செய்து கொண்டிருக்கிறார்........!

ஒரே 
ஒரு 
அழிப்பான் 
இருக்கும் வரை 
பென்சிலால் 
வெற்றி அடைய முடியாது.....!
ஒற்றை தமிழன்
இருக்கும் வரை 
சிங்களா!
உன்னால் 
ஜெயிக்க முடியாது.....!

கழுத்தில் 
கருப்பு கயிறை
கட்டி இருக்கும் சிறுவா...!
அது
என்றாவது 
ஒருநாள் 
சயனைடு குப்பியை  
கட்டும் கயிறாக போகிறது..........! 
தமிழர்க்கு
கொடுக்கும் உயிராக போகிறது......!

விரிந்திருக்கின்ற 
உன்  
கை விரல்கள் 
எப்போது 
மூடி 
பகைவரை 
தாக்கும் 
ஆயுதமாக 
மாறப்போகிறதோ.....?

கலைந்த 
இவனுடைய 
முடியை 
திரும்ப வாரிக்கொள்ள முடியும் ....!
ஆனால் 
சிங்களன் வாரிக்கொண்ட உயிர்களையும் 
கருவிலேயே 
கலைக்கப்பட்ட உயிர்களையும் 
எப்படி 
திரும்ப பெறமுடியும்.....? 

வெறும் 
உடம்போடு 
உன்னை
வீதியில் 
உலா  விட்டவனின்
விலா எலும்புகளை
நீ 
உடைப்பது எப்போது......?

சிறுவா....!
இப்போதே 
எலாவற்றிக்காவும் 
அழுது விடு.....!
உன்
எண்ணங்களை 
நிலமென உழுது விடு....!
பிற்காலத்தில் 
நீ 
அழமாட்டாய்...
கீழும் 
விழமாட்டாய்....!  
புரட்சி புரிய 
போராளியாக 
புறப்பட்டு விட்டால்.....!

அழாதே சிறுவா !
நாங்கள் இருக்கிறோம் 
தமிழர்கள் .!

இச்சிறுவனை
அணைக்கலாம்....!
ஆனால் 
இவன் 
உள்ளத்தின் 
நெஞ்ச தீயை
அணைக்க கூடாது.....!

உரக்க கத்தி
கதறி அழும் சிறுவா....!
உறக்கத்தில் கூட 
இரக்கம் காட்டாத 
அரக்க கூட்டத்தில் 
கத்தி அழுவதை விட.....
கத்தி எடுத்து 
குத்தி கிழித்து 
பதிலடி தந்துவிடு  ......!
பதில் இடி கொடுத்துவிடு  ....!

நம் 
உறவுகளை 
அழித்த 
அவர்களை 
வேரறுப்போம் 
வேரோடு அறுப்போம்  ......!






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக